ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை...இதை மட்டும் செய்யாதீர்கள் - பாக். முன்னாள் வீரர்

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை, இதை மட்டும் செய்யாதீர்கள் என பாக்.முன்னாள் வீரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-09-01 06:48 GMT

Image Courtesy : AFP

கராச்சி,

6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி நேபாளத்தையும், இலங்கை அணி வங்காளதேசத்தையும் வீழ்த்தி தங்களது வெற்றிகளை பதிவு செய்தன.

போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, அணியின் பிளேயிங் லெவனை மட்டும் மாற்றி விடாதீர்கள் என பாகிஸ்தான் அணி நிர்வாகத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு நல்ல தயாராகும் இடமாகவும் தன்னம்பிக்கையை கொடுக்கும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி எப்போதுமே உச்சகட்டமான பரபரப்புடன் இருக்கும். அதில் எப்போதுமே நாங்கள் எங்களுடைய 100% செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புவோம். அதை தற்போதைய அணியும் வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

மேலும் தற்போதைய பாகிஸ்தான் அணி பேலன்ஸ் நிறைந்ததாக இருக்கிறது. உங்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் மிடில் ஆர்டரில் ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். மேலும் வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சு துறையில் நீங்கள் பலமாக இருக்கிறீர்கள்.

எனவே அனைத்தையும் கொண்டிருக்கும் நீங்கள் இந்த கலவையை சிறப்பாக பயன்படுத்தி இதே அணியை தொடர வேண்டும். அதனால் ஒருவேளை நாம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் நீங்கள் தற்போது அணியை மாற்றக்கூடாது. ஏனெனில் தற்சமத்தில் இதுவே சிறந்த அணியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்