சச்சின் தெண்டுல்கருடன் அவரது மகனை ஒப்பிட வேண்டாம் - கபில்தேவ்
சச்சின் தெண்டுல்கருடன் அவரது மகனை ஒப்பிட வேண்டாம் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ,மகன் 22 வயதான அர்ஜுன் தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டும் இந்த நிலைதான்.
இந்த நிலையில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருக்கிறது ., அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது . "எல்லோரும் அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? ஏனென்றால் அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன். அவர் தனது சொந்த கிரிக்கெட்டை விளையாடட்டும், சச்சினுடன் ஒப்பிட வேண்டாம். டெண்டுல்கர் பெயரை வைத்திருப்பதற்கு நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.
அவரிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உங்கள் தந்தையை போல் 50 சவீதம் கூட ஆக முடிந்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார் .