தியோதர் கோப்பை: இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல, கிழக்கு மண்டல அணிகள் மோதல்
நாளை நடக்கும் தியோதர் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.;
புதுச்சேரி,
தியோதர் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மத்திய மண்டலத்துக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்கள் இலக்கை தெற்கு மண்டல அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் சதம் (132 ரன், 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார். தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்ற தெற்கு மண்டலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டல அணி, கிழக்கு மண்டலத்தை சந்திக்கிறது.