தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி: வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் புலம்பல்

தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி வருத்தம் அளிக்கிறது என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறினார்.

Update: 2023-10-25 02:10 GMT

Image courtesy : AFP 

மும்பை,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காளதேசத்துடன் மும்பையில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இதில் வங்காளதேச அணி 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், நாங்கள் முதல் 25 ஓவர்களில் நன்றாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ஆனால் கடைசி 10 ஓவர்களில் ஆட்டம் எங்களது கையை விட்டு சென்றது. குயின்டன் டிகாக் மிகவும் அருமையாக விளையாடினார். எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு, போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டியது மிக முக்கியம் , என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்