ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக டேனியல் விட்டோரி, போரோவெக் நியமனம்
விட்டோரி உதவி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.;
சிட்னி,
ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளர்களாக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி மற்றும் ஆண்ட்ரே போரோவெக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் அந்த தொடரில் இருந்து இருவரும் பணியில் சேர்ந்து பணியாற்றலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அந்த தகவலையும் உறுதி செய்துள்ளது.
நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானாக விளங்கிய டேனியல் விட்டோரி 113 டெஸ்ட் மற்றும் 295 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது ஆஸ்திரேலியா அணிக்கு தற்காலிக அறிவுரையாளராக டேனியல் விட்டோரி இருந்தார்.