ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண்ணை சர்பராஸ் கான் திருமணம் செய்து கொண்டார்.

Update: 2023-08-06 23:16 GMT

image tweeted by @CricCrazyJohns

காஷ்மீர்,

மும்பை கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவரும் சர்பராஸ் கான், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரரைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலர் குவிந்தனர்.

மிகவும் திறமையான பேட்ஸ்மேனாக அறியப்படும் சர்பராஸ் கான், 2022-23 ரஞ்சி டிராபி தொடரில் மூன்று சதங்களின் உதவியுடன் ஆறு ஆட்டங்களில் 92.66 சராசரியில் 556 ரன்கள் எடுத்தார். 2021-22 ரஞ்சி டிராபி சீசனில், அவர் 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்திருந்தார்.

உள்நாட்டு தொடர்களில் மிகவும் நிலையான பேட்டர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதிலும், ஒரு இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை.  

Tags:    

மேலும் செய்திகள்