உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

Update: 2023-10-26 08:24 GMT

 பெங்களூரு, 

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.

இந்த கிரிக்கெட் திருவிழாவில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது.

தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்