டி.என்.பி.எல். கிரிக்கெட்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும்சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், போட்டி நடைபெறும் திண்டுக்கல் மைதானத்தில் தற்போது மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்றியும், சேலம் அணி 2 போட்டிகளில் 1 வெற்றியும் பெற்றுள்ளது.