நீ யாருனு காட்டாத்தா...! ஆத்தா..ஆத்தா..ஆத்தா...! ரசிகர்களின் பக்தியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி...!!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டிவியில் போடியை பார்த்துக் கொண்டிருந்தார்.;
சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக நேற்று நடந்தது. நேற்று தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக இன்று முடிந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டிவியில் போடியை பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்தாவது பாலில் ஜடேஜா சிக்சர் அடித்த உடன் உற்சாகமடைந்த அவர், திடீரென டிவி முன்பு சென்று தாயே ஓம் சக்தி, இந்த ஒரு பால்ல ஜெயிக்கனும்மா.. என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் அவர் கத்தினார். இந்த மீம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதை பார்த்த அந்த சென்னை ரசிகர், உற்சாக மிகுதியில் கத்தி கூச்சலிட்டார். சாமிக்கு அருள் வந்தது போல் ஆத்தா...ஆத்தா...ஆத்தா என கத்தினார். அவரை சமாதானம் செய்யவே ஒருவர் ஓடிவந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.