அவரை அணியில் இருந்து விடுவித்தது மிகப்பெரிய தவறு - கொல்கத்தாவை சாடிய முன்னாள் சென்னை வீரர்...!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை முன்னாள் ஆல்ரவுண்டர் கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2023-05-29 10:51 GMT

அகமதாபாத்,

நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் இன்று சென்னை - குஜராத் அணிகள் மோத உள்ளன. குஜராத் அணியின் நட்சத்திர வீரராக சுப்மன் கில் உள்ளார். இவர் குவாலிபையர் 2 சுற்றில் அதிரடி சதம் விளாசி குஜராத் வெற்றிக்கு வழிவகுத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 851 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இதனிடையே, 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் 2022ம் ஆண்டு சுப்மன் கில்லை கொல்கத்தா அணி விடுவித்தது. இதனை தொடர்ந்து கில்லை குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. கடந்த சீசனிலும், நடப்பு சீசனிலும் கில் குஜராத் தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், சுப்மன் கில்லை குஜராத் அணி விடுவித்தது மிகப்பெரிய தவறு என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டாரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாரிஸ் கூறுகையில், சுப்மன் கில்லை அணியில் இருந்து விடுவித்தது கொல்கத்தா செய்த மிகப்பெரிய தவறு என்று நான் இன்னும் கருதுகிறேன். மற்றொரு நிகழ்வு கேஎல் ராகுலை பெங்களூரு அணி விடுவித்தது. ஆனால், வயது அடிப்படையில் சுப்மன் கில் மிகவும் இளமையான வீரர். அவர் தனது விளையாட்டில் நன்கு வளர்ச்சிபெற்றுள்ளார்.

சுப்மன் கில் குஜராத் அணிக்கு சிறப்பான வீரர் மட்டுமல்ல அடுத்த உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால முதுகெலும்பாக விளங்குவார்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்