அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு

ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-01-18 15:47 GMT

சென்னை,

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநில அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உலக இந்து அறக்கட்டளையின் தலைவர் சுவாமி விக்யானானந்த் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் தூதர்கள், மந்திரிகள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உள்நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்திய அணி வீரர் விராட் கோலி மற்றும் முன்னாள் வீரர்கள் எம்.எஸ்.தோனி , சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விழாவில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்