தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி; மூன்று அறிமுக வீரர்களுடன் பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா...!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

Update: 2023-08-30 02:05 GMT

Image Courtesy: @ICC

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்களான ஸ்மித், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகியோர் இடம் பெறவில்லை. டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், ஹேசில்வுட் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. அதில் மூன்று பேர் அறிமுக வீரர்களாக களம் இறங்க உள்ளனர். ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, மேத் ஷார்ட் போன்ற வீரர்கள் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:-

மேட் ஷார்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜோஷ் இங்க்லிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அப்போட், நாதன் எல்லீஸ், ஆடம் ஜாம்பா, ஸ்பென்சர் ஜான்சன். 



Tags:    

மேலும் செய்திகள்