ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட்: மழையால் 3-வது நாள் ஆட்டம் ரத்து
3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
சிட்னி,
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக் கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித், கவாஜா சதம் அடித்தனர். கவாஜா 195 ரன்னுடனும், ரென்ஷா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை. முதல் 2 செஷன்களும் மழையால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.