ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு...!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Update: 2023-09-10 09:06 GMT

Image Courtesy: @TheRealPCB

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

பாகிஸ்தான் : பகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், பஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்

Tags:    

மேலும் செய்திகள்