ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் காலி இருக்கைகளுடன் காணப்படும் மைதானம்..!

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பல்லகெலே மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

Update: 2023-09-02 12:21 GMT

பல்லகெலே,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு அதாவது 4 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் முதல் முறையாக சந்திப்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது.

இந்த நிலையில் போட்டி நடைபெற்று வரும் பல்லகெலே மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பொதுவாகவே இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும். போட்டி எங்கு நடந்தாலும் ஒரு இருக்கையை கூட ரசிகர் இல்லாமல் பார்க்க முடியாது.

ஆனால் இந்த போட்டிக்கு மைதானத்தில் பாதி இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  அதிக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த அதிகாரிகளும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்