சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு
மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில போட்டிகளை விளையாட உள்ளது. உள்ளுரில் சென்னை அணி விளையாடுவதால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண குவிந்திருப்பர்.
இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை இணைந்து ஏப்ரல்/மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களையும் காண ரசிகர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் கிரிக்கெட் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்.இ.டி-கள் மூலம் ரெயில் நிலையம் உள்ளே ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காணலாம்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் போட்டியை காணவரும் ரசிகர்கள் ரூ.10 கட்டணம் செலுத்தி ஐபிஎல் போட்டிகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.