இந்தியா நல்ல அணியாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினம் - ஜாக் காலிஸ்

1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

Update: 2023-12-06 14:14 GMT

கேப்டவுண்,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்நிலையில் இந்தியா நல்ல அணியாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "இது நல்ல இந்திய அணியாக இருக்கிறது. ஆனால் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்காவுக்கும் மற்றொன்று இந்திய அணிக்கும் சாதகமாக இருக்கலாம். எனவே இத்தொடர் மிகவும் தரமானதாக இருக்கும். மொத்தத்தில் இந்த தொடர் மிகவும் பரபரப்பான போட்டி நிறைந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்