'இவர் தான் சிறந்த டி20 வீரர்...' - ஏபி டிவில்லியர்ஸ் கூறிய வீரர் யார்? விராட் கோலி கிடையாது...!

இவர் தான் சிறந்த டி20 வீரர் என்று ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Update: 2023-03-06 14:59 GMT

ஜொகனர்ஸ்பர்க்,

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நடத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.

ஏபி டிவில்லியர்ஸ் தனது அதிரடி மற்றும் வித்தியாசமான பேட்டிங் யுக்திகளால் 'மிஸ்டர் 360 டிகிரி' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க தனியார் விளையாட்டு சேனலுக்கு ஏபி டிவில்லியர்ஸ் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் உங்களின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஏபி டிவில்லியர்ஸ், என் சிறந்த ஒட்டுமொத்த காலத்திற்குமான டி20 வீரர் வேறு யாருமில்லை ரஷித் கான் தான். அவர் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றிபெறக்கூடியவர். பீல்டிங்கில் அவர் நெருப்பு. சிங்கத்தின் இதயம் கொண்டவர். அவர் வெற்றிபெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக ரஷித் கான் உள்ளார். சிறந்த வீரர்களில் சிறந்த வீரர் அல்ல அவர். அவர் தான் சிறந்த வீரர்' என்றார்.

ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் அதிரடி ஆட்டத்தால் ஆல்-ரவுண்டராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்