பல சாதனைகள் படைத்த கொல்கத்தா - பஞ்சாப் இடையேயான போட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின.;

Update:2024-04-27 10:46 IST

image courtesy: twitter/@IPL

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் பில் சால்ட்டின் அதிரடி அரைசதத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.

பின்னர் 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக பேர்ஸ்டோ 108 ரன்களையும், சஷாங்க் சிங் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்த போட்டி பல சாதனை பட்டியல்களில் இடம் பிடித்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:-

1. 20 ஓவர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் இந்த போட்டியில் படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. பஞ்சாப் கிங்ஸ் - 262 ரன்கள்

2. தென் ஆப்பிரிக்கா - 259 ரன்கள்

3. மிடில்செக்ஸ் - 253 ரன்கள்

2. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட 2-வது போட்டியாக இது பதிவாகி உள்ளது.

அந்த பட்டியல்:-

1.பெங்களூரு - ஐதராபாத் - 549 ரன்கள்

2. ஐதராபாத் - மும்பை/கொல்கத்தா - பஞ்சாப் - 523 ரன்கள்

3. டி20 வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஒரு போட்டியாக இது சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. கொல்கத்தா - பஞ்சாப் - 42 சிக்சர்கள்

2. ஐதராபாத் - மும்பை/ பெங்களூரு - ஐதராபாத் - 38 சிக்சர்கள்

3.பால்க் லெஜண்ட்ஸ் - காபூல் ஸ்வானன் - 37 சிக்சர்கள்

Tags:    

மேலும் செய்திகள்