9 லீக் ஆட்டங்கள்...9 மைதானங்கள்...இந்திய அணியின் உலகக்கோப்பை அட்டவணை - விவரம்...!

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

Update: 2023-06-27 10:44 GMT

புதுடெல்லி,

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

முதல் ஆட்டத்தில் கடந்த உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆட உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது 9 லீக் ஆட்டங்களை 9 மைதாங்களில் ஆட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியா - ஆஸ்திரேலியா                 அக்டோபர்-8                 சென்னை

இந்தியா - ஆப்கானிஸ்தான்             அக்டோபர்-11           டெல்லி

இந்தியா - பாகிஸ்தான்                      அக்டோபர்-15                    அகமதாபாத்

இந்தியா - வங்காளதேசம்                 அக்டோபர்-19                புனே

இந்தியா - நியூசிலாந்து                     அக்டோபர்-22                     தர்மசாலா

இந்தியா - இங்கிலாந்து                     அக்டோபர்-29                     லக்னோ

இந்தியா - தகுதிச்சுற்று அணி          நவம்பர்-2                மும்பை

இந்தியா - தென் ஆப்பிரிக்கா          நவம்பர்-5                 கொல்கத்தா

இந்தியா - தகுதிச்சுற்று அணி          நவம்பர்-11               பெங்களூரு

Tags:    

மேலும் செய்திகள்