நியூசிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
கராச்சி,
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-வது ஆட்டம் கராச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இமாம் உல்-ஹக் 90 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 54 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் 261 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. அந்த அணி முந்தைய 2 ஆட்டங்களிலும் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.