3வது ஒருநாள் போட்டி : 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா ? இலங்கை அணியுடன் நாளை மோதல்

இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது

Update: 2023-01-14 11:05 GMT

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் 67 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது

 தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. . நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்