3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி 61 பந்தில் 119 ரன்கள் எடுத்தார்

Update: 2023-03-22 08:30 GMT

கேப் டவுன,

வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அவர் 72 ரன்னில் அவுட்டானார்.

நிகோலஸ் பூரன் 39 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜேன்சன், ஜிரால்டு கொயட்சி, பார்ச்சுன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி 61 பந்தில் 119 ரன்கள் எடுத்தார் . ஜேன்சன் 43 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன், ஜேன்சன் ஜோடி103 ரன்கள் சேர்த்தது. இறுதியில், தென் ஆப்பிரிக்கா 29.3 ஓவரில் 264 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

இதன்மூலம் ஒருநாள் போட்டி தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்