நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணியின் முன்னணி வீரர் விலகல்
அவருக்கு பதிலாக நிஷான் பெய்ரிஸ் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொழும்பு,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான விஷ்வா பெர்னண்டோ விலகியுள்ளார். இவருக்கு பதிலாக அறிமுக வீரரான நிஷான் பெய்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.