2வது டி20 போட்டி : இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.;

Update: 2023-01-04 16:41 GMT

 புனே ,

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை புனே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

முதல் போட்டி தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்