156 கி.மீ.வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்த உம்ரான் மாலிக்..!

அதிவேகத்தில் பந்து வீசிய இந்திய வீரர் என்ற சாதனையில் அவர் நீடிக்கிறார்

Update: 2023-01-11 08:59 GMT

கவுகாத்தி,

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் உம்ரான் மாலிக். இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 8 ஓவர் வீசி 57 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் உம்ரான் மாலிக் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை புரிந்தார். 14-வது ஓவரில் அதாவது அவரது 2-வது ஓவரில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.

இதன் மூலம் அதிவேகத்தில் பந்து வீசிய இந்திய வீரர் என்ற சாதனையில் அவர் நீடிக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் உம்ரான் மாலிக் 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.இதன் மூலம் பும்ராவை முந்தினார். பும்ரா 153.36 கி.மீ வேகத்தில் வீசி இருந்தார். உம்ரான் மாலிக் ஐ.பி.எல். போட்டியில் 156.9 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதித்து இருந்தார். மற்ற இந்திய வீரர்களில் முகமது ஷமி 153.3 கி. மீட்டர் வேகத்திலும், நவ்தீப் சைனி 152.85 கி.மீ வேகத்திலும் வீசி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்