மருதமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: பக்தர்கள் சாமி தரிசனம்

சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2024-05-23 06:17 GMT

கோவை,

கோவை மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்றழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு உச்சிகால பூஜை மற்றும் வள்ளி-தெய்வானையுடன் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது. விசாக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமியை எளிதாக தரிசிக்க கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்