திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 16-ந்தேதி துளசி மஹாத்ய உற்சவம்
துளசி மஹாத்ய உற்சவத்தின் ஒரு பகுதியாக, உற்சவர் கோவிந்தராஜ சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 16-ந்தேதி சிரவண சுத்த துவாதசி அன்று துளசி அவதரித்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் துளசி மஹாத்ய உற்சவம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக அன்று காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர் கோவிந்தராஜ சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பிறகு காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை கோவிந்தராஜ சுவாமிக்கு ஆஸ்தானம் நடக்கிறது.
அதில் அர்ச்சகர்கள் பங்கேற்று துளசி மஹாத்யம் புராணம் ஓதுகிறார்கள். முடிவில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.