திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் (ஜனவரி) பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன.

Update: 2024-01-02 01:49 GMT

திருமலை,

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் (ஜனவரி) நடைபெற உள்ள சிறப்பு உற்சவங்கள் விவரம் வருமாறு:-

வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு மூலவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, திருவீதி உற்சவம், ஆஸ்தானம் நடக்கிறது. அமாவாசையை முன்னிட்டு வருகிற 11-ந்தேதி காலை 8 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகம், இரவு 7 மணிக்கு அனுமன் வாகனச் சேவை நடக்கிறது.

25-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம். அன்று புனர்வசு நட்சத்திரத்தையொட்டி காலை 11 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாணம், மாலை 5 மணிக்கு சீதா, ராமர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து ராமச்சந்திரா புஷ்கரணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள். மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, ஆஸ்தானம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்