தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா 23-ம் தேதி தொடங்குகிறது

மார்ச் 24-ம் தேதி நண்பகல் அய்யன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு ஆபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

Update: 2024-03-19 08:02 GMT

காயாமொழி அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலில் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அய்யன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் பேச்சியம்மன், வன்னியராஜா, குலசேகர ராஜா, சுடலைமாடன் ஆகிய ஏண்ணற்ற வனதேவதைகளும் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு7 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.

மார்ச் 24-ம் தேதி காலை 9 மணிக்கு பால்குடம், தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வருதல் வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு அய்யன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு ஆபிஷேக ஆராதனைகள், ஆன்மீக சொற்பொழிவு, பகல் ஒரு மணி அளவில் ஆலயத்திற்கு வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் மதிய உணவு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு பக்தி இன்னிசை நடைபெறும்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள் அதிகாலையில் கோவிலுக்கு வந்துசாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்