அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு

திருநகரி வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது.

Update: 2023-06-23 19:00 GMT

திருவெண்காடு;


திருநகரி வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது.

அடைக்கலம் காத்த அய்யனார்

திருவெண்காடு அருகே திருநகரி வேதராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், அகோர வீரபத்திரர், தூண்டிக்கார சாமி, பெரிய உடையார், சின்ன உடையார் மற்றும் முத்தம்மாள் உள்ளிட்ட பரிவார சாமி சன்னதிகளில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது.இதையடுத்து இந்த கோவிலின் குடமுழுக்கு 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11:30க்குள் நடக்கிறது.

யாகசாலை பூஜை

இதையொட்டி காலை கணபதி பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்கியது. மாலை முதல்கால யாக பூஜை திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் மற்றும் வேத பண்டிதர்கள் முன்னிலையில் தொடங்கியது.பின்னர் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கு ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவர் குணசேகரன் தலைமையில் திருப்பணி கமிட்டியினர், குலதெய்வ பக்தர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்