தங்க முனீஸ்வரர் கோவில் விழா
அகர சென்னியநல்லூர் தங்க முனீஸ்வரர் கோவில் விழா நடந்தது;
குத்தாலம்;
குத்தாலம் அருகே அகர சென்னியநல்லூர் மெயின் ரோட்டில் தங்க முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 60-ம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அசைவ உணவு படைக்கப்பட்டு சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், சென்னியநல்லூர் ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.