தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்.. திருப்பதியில் புஷ்பாஞ்சலி

திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு தேவஸ்தான திட்ட அலுவலர் ராஜகோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update:2024-08-14 11:07 IST

திருப்பதி ஏழுமலையானின் பெருமையை போற்றி பல பாடல்களை இயற்றிய பெண் துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பாவின் 207-வது ஆண்டு நினைவு நாள், அவரின் அவதார தலமான தரிகொண்டாவிலும், திருப்பதி மற்றும் திருமலையிலும் நேற்று (ஆகஸ்டு 13) அனுசரிக்கப்பட்டது.

திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான திட்ட அலுவலர் ராஜகோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்