காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம்,
ஸ்ரீ ராம நவமியை ஒட்டி அத்திகிரி மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் ராமர் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் ராமர் லக்ஷ்மணன் சீதை ஆகியோருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ராமர் சீதை லட்சுமணன் உடன் காஞ்சி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் மேளதாளங்களும் வழங்க வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர சன்னதி வீதியில் உள்ள திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். பின்னர் கோவில் மாட வீதிகளில் ஸ்ரீ ராமரும் வரதராஜ பெருமாளும் வீதி உலா வந்து கோவிலுக்கு எழுந்தருளினார்கள். ஸ்ரீ ராம நவமி சிறப்பு வழிபாடு உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மாட வீதிகளில் வீதி உலா வந்த ராமருக்கும், வரதராஜ பெருமாளுக்கும் வழியெங்கும் காத்திருந்த பக்தர்கள் தீபாராதனைகள் கொடுத்து வணங்கி வழிபட்டனர்.