பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-08 18:45 GMT

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி கனவாய்ப்பட்டி வெங்கட்ரமணசாமி கோவிலில் நேற்று அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள், பாளேகுளி அனுமந்தராய சாமி, கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள், தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா கோவில் தெரு நவநீத வேணு கோபால சாமி, பாப்பாரப்பட்டி வேணுகோபால் சாமி கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேர்த்திக்கடன்

அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல கனவாய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மொட்டை போட்டுக் கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

நேற்று 3-வது புரட்டாசி சனி என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வீடுகளிலும் காலையிலேயே பொதுமக்கள் குளித்து, பெருமாளை வழிபட்டனர். இதே போல கடைவீதிகளிலும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்