ஆன்மிக பூமியாகத் திகழும் தென் தமிழ்நாடு

ஆன்மிக பூமியாகத் திகழும் தென் தமிழ்நாட்டில் 25 ஆயிரம் சிவாலயங்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

Update: 2023-02-16 14:47 GMT

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ஆலயங்களைக் கொண்ட மாநிலம், தமிழ்நாடு. இங்கு தற்போது சுமார் 25 ஆயிரம் சிவாலயங்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இதில் சமயக்குரவர்களால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களும் அடங்கும். தென்பாண்டி நாடு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மட்டும் பழங்காலங்களில் 274 சிவாலயங்கள் அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு அந்த இரு மாவட்டங்களும் ஆன்மிகத்தில் திளைத்திருந்ததாக பல புராணங்கள் சொல்கின்றன.

தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடைமருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தல புராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்களை, நம் முன்னோர்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) என்ற எண்ணிக்கையில் பிரித்து வழிபட்டுள்ளனர். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிவ கயிலாயங்கள்

* பிரம்மதேசம் கயிலாசநாதர் கோவில்

* அரியநாயகிபுரம் கயிலாசநாதர் ஆலயம்

* திருநெல்வேலி (தென்கயிலாயம்) நெல்லையப்பர் கோவில்

* கீழநத்தம் (மேலூர்) கயிலாசநாதர் ஆலயம்

* முறப்பநாடு கயிலாச நாதர் கோவில் (தூத்துக்குடி மாவட்டம்)

* தென்திருப்பேரை கயிலாசநாதர் கோவில் (தூத்துக்குடி மாவட்டம்)

* சேர்ந்தபூமங்கலம் கயிலாசநாதர் ஆலயம் (தூத்துக்குடி மாவட்டம்)

* கங்கைகொண்டான் கயிலாச நாதர் கோவில்

நெல்லையப்பர் ஆலயம்

சிவபெருமானுக்குரிய ஐந்து நடன சபைகளில், 'தாமிர சபை' என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். இது தெற்கில் இருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கில் இருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆலயத்தில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் ஆகியோருக்கு சமமான அளவில் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமி, அம்பாள் சன்னிதிகள் இரண்டும், அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத தலங்கள்

பஞ்ச பூதத் தலங்களாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஐம்புகேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், திருக்காளத்தி காளத்திநாதர் கோவில் ஆகியவை திகழ்கின்றன. இதே போல் மதுரை, தஞ்சாவூர், சென்னை என்று ஒவ்வொரு சிறப்புமிக்க

ஊர்களிலும் கூட அந்தந்த ஊர்களுக்குரிய பஞ்ச பூதத் தலங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூதத் தலங்கள் இவை...

* சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் - மண் தலம்

* கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஆலயம் - அக்னி தலம்

* தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில் - நீர் தலம்

* தென்மலை திரிபுரநாதேஸ்வரர் ஆலயம் - காற்று தலம்

* தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் - ஆகாய தலம்

பஞ்ச குரோச தலங்கள்

'குரோச' என்பதற்கு 'காசிக்கு நிகரான' என்று பொருள்படும். அதாவது காசிக்கு நிகரான தலங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. அவற்றில் தென்பாண்டி நாட்டில் உள்ள பஞ்ச குரோச தலங்களைப் பார்ப்போம்.

* சிவசைலம் சிவசைலப்பர் கோவில்

* ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் ஆலயம்

* கடையம் வில்வ வனநாதர் கோவில்

* திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் ஆலயம்

* பாபநாசம் பாபநாசர் கோவில்

சபை சிவாலயங்கள்

சிவபெருமானால் நடனம் இயற்றப்பட்ட ஐந்து சிவாலயங்கள், தமிழ்நாட்டில் சிறப்புக்குரியவை. அவற்றில் இரண்டு இடங்கள் தென்பாண்டி நாட்டில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. ஐந்து சபைகளில் இரண்டு சபை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளன.

* சித்ர சபை - திருக்குற்றாலம்

* தாமிர சபை- திருநெல்வேலி

முப்பீட தலங்கள்

* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் ஆலயம்

* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் ஆலயம்

* வல்லநாடு - திருமூலநாதர் ஆலயம் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

பஞ்ச பீட தலங்கள்

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. ஐந்தாவது பஞ்ச பீட தலமாக கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் ஆலயம் திகழ்கிறது.

* கூர்ம பீடம் - பிரம்மதேசம்

* சக்ர பீடம் - குற்றாலம்

* பத்ம பீடம் - தென்காசி

* காந்தி பீடம் - திருநெல்வேலி

* குமரி பீடம் - கன்னியாகுமரி

ராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்

இந்தியாவின் வட மாநிலமான அயோத்தியில் பிறந்து வளர்ந்த ராமபிரான், 14 வருடம் காட்டிற்குச் செல்ல நேர்ந்தபோது, அவர் அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் தென்பகுதி வரை நடந்தே பயணித்தார். அப்படி அவர் வரும் வழியில் வழிபட்ட தலங்கள் ஏராளம். அவற்றில் தென்பாண்டி நாட்டில் ராமர் வழிபட்ட பஞ்ச லிங்க தலங்கள் இவை..

* களக்காடு சத்யவாகீசர் கோவில்

* பத்தை குலசேகரநாதர் ஆலயம்

* பதுமனேரி நெல்லையப்பர் கோவில்

* தேவநல்லூர் சோமநாதர் ஆலயம்

* சிங்கிகுளம் கயிலாசநாதர் கோவில்

நவக்கிரக திருத்தலங்கள்

* பாபநாசம் - சூரியன்

* சேரன்மகாதேவி - சந்திரன்

* கோடகநல்லூர் - செவ்வாய்

* குன்னத்தூர் - ராகு

* முறப்பநாடு - குரு (தூத்துக்குடி மாவட்டம்)

* ஸ்ரீவைகுண்டம்- சனி (தூத்துக்குடி மாவட்டம்)

* தென்திருப்பேரை - புதன் (தூத்துக்குடி மாவட்டம்)

* ராஜபதி - கேது (தூத்துக்குடி மாவட்டம்)

* சேர்ந்தபூமங்கலம் - சுக்ரன் (தூத்துக்குடி மாவட்டம்)

நவ சமுத்திர தலங்கள்

* அம்பாசமுத்திரம்

* ரவணசமுத்திரம்

* வீராசமுத்திரம்

* அரங்கசமுத்திரம்

* தளபதிசமுத்திரம்

* வாலசமுத்திரம்

* கோபாலசமுத்திரம்

* வடமலைசமுத்திரம்

(பத்மனேரி)

* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்)

தச வீரட்டானத் தலங்கள்

* சிவசைலம் சிவசைலப்பர் ஆலயம்

* வழுதூர் அக்னீஸ்வரர் கோவில்

* கோடகநல்லூர் அவிமுக்தீஸ்வரர் ஆலயம்

* சிங்கிகுளம் கயிலாசநாதர் கோவில்

* மேலநத்தம் அக்னீஸ்வரர் ஆலயம்

* ராஜவல்லிபுரம் அக்னீ ஸ்வரர் கோவில்

* தென்மலை திருப்பாத்தீஸ்வரமுடையார் ஆலயம் (தென்காசி மாவட்டம்)

* அங்கமங்கலம் நரசிங்கஈஸ்வரமுடையார் கோவில்

(தூத்துக்குடி மாவட்டம்)

* காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆலயம் (தூத்துக்குடி மாவட்டம்)

* திற்பரப்பு மகாதேவர் கோவில் (கன்னியாகுமரி

Tags:    

மேலும் செய்திகள்