சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு...!

சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.;

Update:2023-12-26 20:24 IST

பத்தினம்திட்டா, 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான பக்கதர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு தங்க அங்கி இன்று அணிவிக்கப்பட்டது. அதன்படி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேர்ந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைந்தது. தற்போது தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்