பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்கவும், மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-30 07:28 GMT

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்கவும், மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https: muthamizhmuruganmaanadu 2024.com என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, பதிவுகள் நடந்து வருகின்றன. மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் ஜூன் 15-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த அவகாசம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று பலர் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்