மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா பெரிய சக்கர தீவெட்டி பவனி 11-ந்தேதி நடக்கிறது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

Update: 2024-03-09 13:20 GMT

மணவாளக்குறிச்சி,

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த 3-ந்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கிறது.

விழாவின் மூன்றாம் நாள் முதல் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, தினசரி மாலை சந்தனகுடம் பவனி, தினசரி காலை, மதியம், மாலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

தொடர்ந்து எட்டாம் நாள்(நாளை) பகல் 12 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோயில் பக்தர்கள் சார்பில் மாவிளக்கு பவனி, மாலை 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.15 மணிக்கு சிராயன்விளை செம்பொன்விளை பக்தர்கள் சார்பில் சந்தனகுடம் பவனி, காட்டுவிளை சிவசக்தி மந்திர வித்யாபீடம் சார்பில் பால்குடம் மற்றும் காவடி பவனி நடைபெற உள்ளது.

இதையடுத்து ஒன்பதாம் நாள்(திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தனகுடம் பவனி, பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனகுடம், காவடி பவனி, மாலை 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சார்பில் சந்தனகுடம் பவனி, இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பத்தாம் நாள் இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்