ஊழ்வினை போக்கும் உதி பிரசாதம்.. சாய் பாபா மகிமைகள்

ஷீரடி துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

Update: 2024-07-04 12:48 GMT

சாய் பாபா.. இந்த மந்திரச் சொல்லை உச்சரிக்கும்போதே மனம் அமைதி அடைகிறது. இந்துக்கள் இவரை தத்தாத்திரேயரின் அவதாரமாக கருதுகின்றனர். ஷீரடி சாய் பாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

எவருடைய வீட்டில் சாய் பாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை. சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்யும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து 'உதி' என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த 'உதி' மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.

பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. இறந்தவரை உயிர் பிழைக்க வைத்தது, அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கியது, நோய் தீர்த்தது, திருடர்களிடமிருந்து காத்தது, ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தது என்று அவர் செய்த அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

"கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்" என கூறிய சத்திய வாக்கின்படி இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசிகளை வாரி வழங்குகிறார் பாபா.

Tags:    

மேலும் செய்திகள்