நறுமணக் கலவை பூசி தூய்மைப் பணி.. அப்பலாயகுண்டா கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெறும்.

Update: 2024-06-11 12:23 GMT

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் நிகழ்வான ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பரிமளம் மற்றும் நறுமணக் கலவை பூசி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற தூய்மை பணியைத் தொடர்ந்து, காலை 11 மணி முதல் சர்வ தரிசனம் தொடங்கியது.

இந்நிகழ்வில் கோவில் துணை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், தலைமை அர்ச்சகர் சூர்யகுமார் ஆச்சார்யலு, கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி, கோவில் ஆய்வாளர் சிவா மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

அங்குரார்ப்பணம் 16-ம் தேதி நடைபெறும். மறுநாள் பிரம்மோற்சவ விழா தொடங்கும். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெறும். முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெறும். கல்யாண உற்சவ நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ள தம்பதிகள் 500 ரூபாய் டிக்கெட் பெற்று பங்கேற்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்