சாத்தனூர் திருமூலர் கோவிலில் அசுபதி நட்சத்திர மகாபிஷேகம்

சாத்தனூர் திருமூலர் கோவிலில் அசுபதி நட்சத்திர மகாபிஷேகம்;

Update:2022-08-18 01:44 IST

திருவிடைமருதூர்

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூரில் திருமூல நாயனார் கோவில் உள்ளது. இங்கு திருமூலருக்கு நேற்று அசுபதி நட்சத்திர மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகையான பொருட்களால் திருமூலருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சந்திரசேகரன் மற்றும் சாத்தனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்