வேதாரண்யம் வேதமாகாளியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
வேதாரண்யம் வேதமாகாளியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி;
வேதாரண்யம் நகரம் கீழசன்னதி தேரடி பகுதியில் வேதமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரியையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரி நிறைவையொட்டி கடந்த 6-ந்தேதி இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு தேரோடும் வீதி வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீதி உலாவின் போது பச்சை காளி, பவளக்காளி வேடமணிந்தவா்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.