களைகட்டும் ஆயுத பூஜை.. பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு!

சென்னை, பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.;

Update:2022-10-04 09:05 IST

சென்னை:

உலகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள்.

மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள். பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவிப்பார்கள்.

இந்நிலையில் சென்னை, பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் ஆயுதபூஜை கொண்டாட்டப்பட்டு வருகிறது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்