பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இவரது சன்னிதியின் பின்புறத்தில், படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது.
இந்த ஆலமரத்தை தலவிருட்சமாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டு அமைந்திருக்கும் சிறப்புமிக்க ஆலயமாக இது திகழ்கிறது. பக்தர்கள் இந்த மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் குரு தட்சிணாமூர்த்தியின் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சன்னிதியின் முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமையில் வரும் குரு ஓரை நேரத்தில் (மதியம் 1-2 மணி), இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மதுரையில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக 90 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பத்தூர் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் பட்டமங்கலம் ஊரை அடையலாம்.