14 சீடர்களுடன் குரு தட்சிணாமூர்த்தி

சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன்தான், தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கயிலாசநாதர் கோவிலில், 14 சீடர்களுடன் காட்சி தருகிறார், குரு பகவான்.;

Update:2021-11-09 14:05 IST
சிவபெருமானின் குரு வடிவமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தியிடம், ஆங்கீரசர், அத்ரி, காசியபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர் உபதேசம் பெற்றனர்.

இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் இங்கு உள்ளனர். இத்தகைய வடிவத்தில் தட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவிலில், தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோவிலுக்கு அருகிலேயே ருக்மணி- சத்யபாமா உடனாய கிருஷ்ணர் கோவிலும், மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோவிலும் உள்ளது.

மேலும் செய்திகள்