பைபிள் மாந்தர்கள் : பரிமளம் பூசிய பெண்
சீமோன் என்னும் செல்வந்தரான பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். இயேசு பரிசேயர்களின் வெளிவேடத்தை வெளிப்படையாகவே எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது.;
சீமோன் என்னும் செல்வந்தரான பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். இயேசு பரிசேயர்களின் வெளிவேடத்தை வெளிப்படையாகவே எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது.
இயேசு பாரபட்சம் பார்ப்பவரல்ல, அவர் அந்த அழைப்பை ஏற்றார். ஏழைகளையும் பாவிகளையும் தேடிச்சென்ற இயேசு, பணக்கார பரிசேயனையும் நிராகரிக்கவில்லை.
பரிசேயன் மகிழ்ந்தான். தன்னுடைய நண்பர்களை எல்லாம் அழைத்து இயேசுவை எப்படி எல்லாம் கேள்வி கேட்டு மடக்கலாம் என்று ஆலோசனை செய்து காத்திருந்தான்.
இயேசு விருந்துக்கு வந்தார். விருந்தினர்களை உபசரிக்கும் யூத கலாசாரத்தை அந்த பரிசேயர் பின்பற்றவில்லை. அவர் இயேசுவை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தாரேயன்றி ஒரு விருந்தினராகப் பார்க்கவில்லை.
இயேசு உணவு உண்பதற்காகப் பந்தியில் அமர்ந்தார்.
அதே ஊரில் ‘பாவி’ என்று மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் இயேசு இருக்கும் இடத்தை அறிந்ததும் ஒரு அழகிய படிகச் சிமிழில் நறுமணத் தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டாள்.
அவள் வாழ்ந்து கொண்டிருந்த பாவ வாழ்க்கை அவளுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவள் குனிந்து இயேசுவின் பாதத்தைத் தொட்டாள். அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீர்த் துளிகள் இயேசுவின் பாதங்களில் வழிந்தோடின. அவள் தம்முடைய கூந்தலினால் அவருடைய பாதங்களைத் துடைத்து, பாதங்களில் பணிந்து முத்தமிட்டாள்.
பின்பு தான் கொண்டு வந்திருந்த படிகச் சிமிழைத் திறந்து நறுமணத் தைலத்தை எடுத்து அவருடைய பாதங்களில் பூசினாள்.
இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயனை இந்தக் காட்சி சட்டென பிடித்துக் கொண்டது. இயேசுவைச் சிக்க வைக்க இது சரியான காட்சி என நினைத்தான்.
‘பாருங்கள்... இவரெல்லாம் ஒரு பெரிய இறைவாக்கினராம். தம்மைத் தொடும் இவள் எத்தனை பெரிய பாவி என்பது கூட இவருக்குத் தெரியவில்லை...’ என்று சுற்றியிருந்த அவருடைய பரிசேய நண்பர்களிடம் கேலியாய் பேசினான்.
இயேசு அவனை அழைத்தார்.
‘ஐயா... நான் ஒன்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லும்’.
இயேசு சொல்ல அந்தப் பரிசேயன் இயேசுவின்
முகத்தைப் பார்த்தான்.
‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள். ஒருவர் ஐநூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமும் கடன் வாங்கியிருந்தார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. அவர்கள் மேல் மனமிரங்கிய கடன் கொடுத்தவன் அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்தான். அந்த இருவருள் யார் அதிகம் மகிழ்ந்திருப்பார்?’ இயேசு கேட்டார்.
‘அதிகக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர் தான் அதிகம் மகிழ்ந்திருப்பார்’ அவன் எள்ளலுடன் பதில் சொன்னான்.
இயேசு புன்னகைத்தார். ‘சரியாகச் சொன்னீர். நான் உமது வீட்டுக்கு வரும்போது நீர் என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இந்தப் பெண்ணோ கண்ணீரினாலேயே என் பாதங்களைக் கழுவி விட்டாள். நீர் என்னை முத்தமிடவில்லை. இந்தப் பெண்ணோ என் பாதங்களில் முத்தமிட்டாள். நீர் எனது தலைக்குக் கூட எண்ணெய் பூசவில்லை, இவள் என் பாதத்துக்கே பரிமளத் தைலம் பூசினாள். மொத்தத்தில் என்னை விருந்துக்கு அழைத்த நீர் எனக்கு எந்த வரவேற்பையும் செய்யவில்லை. இந்தப் பெண் யாரும் அழைக்காமலேயே வந்து மரியாதை செய்கிறாள்’.
‘நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை. கனிகளை வைத்தே மரங்களின் தன்மை அறியப்படும். நல்லவன் தன் உள்ளமென்னும் கருவூலத்திலிருந்து நல்லவற்றைச் செயல்படுத்துவான், தீயவனோ தீயவற்றைச் செயல்படுத்துவான். ஒவ்வொரு மரமும் அதன் கனியினால் அறியப்படும். முட்செடிகளில் அத்திப் பழங்களையோ, முட்புதர்களில் திராட்சைக் கொடிகளையோ யாரும் அறுத்துச் சேகரிக்க முடியாது’.
‘உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன். இந்தப் பெண் செய்த பல பாவங்கள் இன்று மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவருடைய அன்பு மிகுதியானது’ என்றார்.
அந்த விருந்தில் பந்தியமர்ந்திருந்த பலருக்கும் இயேசுவின் பதில் பிடிக்கவில்லை. அவர்கள் இயேசுவை மீட்பராகவோ, கடவுளின் மகனாகவோ பார்க்காத பரிசேயர்கள்.
‘பாவிகளை மன்னிக்க இவர் யார்? அது கடவுளின் பணியல்லவா?’ என்று அவர்கள் முணு முணுத்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ‘எனக்கு அந்த அதிகாரம் உண்டு என்பதை விரைவில் உணர்வீர்கள்’ என்றார். பின் அந்தப் பெண்ணிடம் ‘உனது நம்பிக்கை உன்னை மீட்டது, அமைதியுடன் செல்க’ என்றார்.
அவள் மீட்பைப் பெற்ற மகளாக வீடு திரும்பினாள்.
இறைவனின் பாதத்தில் சரணடையும் போது பாவிகள் முழுமையான மீட்பைப் பெற்றுக் கொள்வார்கள். இயேசுவே நமது வீட்டுக்கு நேரடியாய் வந்தால் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீட்பு பெறுவதில்லை. இந்த இரண்டு செய்திகளையும் இந்த நிகழ்வு நமக்குத் தருகிறது.