இந்த வார விசே‌ஷங்கள் 3–1–2017 முதல் 9–1–2017 வரை

* சிதம்பரம் சிவபெருமான் சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு. * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு பூத வாகனத்தில் திருவீதி உலா. * சங்கரநயினார் கோவில் சிவபெருமான் தங்கப் பல்லக்கில் பவனி.;

Update:2017-01-03 07:45 IST
3–ந் தேதி (செவ்வாய்)

*    சிதம்பரம் சிவபெருமான்    சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு.

*    ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு பூத வாகனத்தில் திருவீதி உலா.

*    சங்கரநயினார் கோவில் சிவபெருமான் தங்கப் பல்லக்கில் பவனி.

*    வீரவநல்லூர் சுவாமி கற்பக வாகனத்திலும், அம்மன் கமல வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.

*    மேல்நோக்கு நாள்.

4–ந் தேதி (புதன்)

*    சஷ்டி விரதம்.

*    திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாய பர்வத வாகனத்தில் வீதி உலா.

*    சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் புறப்பாடு.

*    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற் சவம்.

*    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை.

*    கீழ்நோக்கு நாள்.

5–ந் தேதி (வியாழன்)

*    திருநெல்வேலி நெல்லையப்பர்–காந்திமதி அம்மன்  ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா.

*    ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை வெள்ளி சீவிகையில் பவனி. மாலையில் சிவபூஜை செய்தருளிய காட்சி.

*    ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவம்.

*    திருக்குற்றாலம் சிவபெருமான் விருட்ச வாகனத்தில் திருவீதிஉலா.

*    மேல்நோக்கு நாள்.

6–ந் தேதி (வெள்ளி)

*    ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

*    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், அமிர்த மோகினி திருக்கோலமாய் காட்சியருளல்.

*    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங் களில் திருமொழி திருநாள் உற்சவம்.

*    வீரவநல்லூர் சிவபெருமான் காலை விருட்ச வாகனத்திலும், இரவு இந்திர விமானத்திலும் வீதி உலா.

*    சமநோக்கு நாள்.

7–ந் தேதி (சனி)

*    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம்.

*    ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை ருத்திராட்ச விமானத்தில், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி.

*    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவம்.

*    திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

*    சமநோக்கு நாள்.

8–ந் தேதி (ஞாயிறு)

*    வைகுண்ட ஏகாதசி.

*    சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா.

*    ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு முத்தங்கி சேவை.

*    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார், காலை கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல், இரவு சந்திர பிரபையில் பவனி.

*    கீழ்நோக்கு நாள்.

9–ந் தேதி (திங்கள்)

*    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலமாய் காட்சி அருளல், மாலை தங்கபரங்கி நாற்காலியில் புறப்பாடு.

*    ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற் சவம்.

*    சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் புறப்பாடு கண்டருளல்.

*    மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

*    கீழ்நோக்கு நாள்.

மேலும் செய்திகள்