பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: சீனாவை சேர்ந்த 2 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-10-07 16:17 GMT

லாகூர்,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியார் மின் உற்பத்தி, விநியோக நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த பொறியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கராச்சியில் உள்ள மின் உற்பத்தி, விநியோக நிறுவனத்தில் பயணியாற்றி வரும் சீன நாட்டினரை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. சீன நாடு ஊழியர்கள் பயணித்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர். கராச்சி விமான நிலையம் அருகே இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை பலூசிஸ்தானை சேர்ந்த கிளர்ச்சிக்குழு மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்