வெளிநாடு செல்ல தென்கொரிய அதிபருக்கு தடை

தென்கொரியாவில் அவசர நிலை அறிவித்த விவகாரத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-12-10 01:45 GMT

சியோல்,

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மேலும் செய்திகள்